ஊரடங்கு தளர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான தளர்வு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.

 • Share this:
  இங்கிலாந்தில் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பப்கள் ஜூலை 4 முதல் திறக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளியுடன் திரையரங்குகளை திறக்கவும், வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்தும் போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டுள்ளார்.

  மேலும் முடிதிருத்தகங்கள், ஹோட்டல்கள், விடுமுறை இல்லங்கள் ஆகியவை இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு விடுதிகள், பனிச்சறுக்கு மையங்கள், ஸ்பாக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...

  எரிபொருள் மீதான வரிகள்... உலகளவில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

  தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்கா விட்டால், மீண்டும் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்படும் என போரிஸ் ஜான்ஸன் எச்சரித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: