உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து அறிவித்தது இங்கிலாந்து சுகாதாரத்துறை

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து அறிவித்தது இங்கிலாந்து சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ்

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான கொரோனா அறிகுறிகளோடு புதிய 7 அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது..

 • Share this:
  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகையே முடக்கிப் போட்ட கொரோனா வைரஸால் உலக அளவில் 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முந்தைய வைரஸ் வகையை காட்டிலும் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

  இந்த புதிய வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவும் முறையில் எந்த மாற்றமும் கண்டறியப்படவில்லை. இருமல் அல்லது தும்மலின் போது வெளிப்படும் வைரஸ் துகள்களின் மூலமாகவே ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. ஆனால் பரவும் வேகம் முன்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் குறுகிய காலத்தில் அதிகம் பேரை தாக்கும் என்பதே இப்போதைய சவாலாக இருக்கிறது.

  இங்கிலாந்தின் புள்ளிவிவரங்களின் படி முந்தைய கொரோனா வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு நோயை பரப்பும் வீதம் 1.1 ஆக இருந்தது. ஆனால் தற்போதைய உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 1.5 சதவீதம் முதல் 1.7 சதவீதம் வரை தொற்றை பரப்புவது தெரியவந்துள்ளது.

  கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், வாசனை மற்றும் சுவை இழத்தல் ஆகியவை கூறப்பட்டு வந்தன. ஆனால் உருமாறிய கொரோனா வைரஸுக்கு மேலும் 7 அறிகுறிகள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  அதீத சோர்வு, தலைவலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி, தோல் அரிப்பு ஆகியவை இருந்தாலும் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று இங்கிலாந்தின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

  பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்று வழங்கப்படுகிறது...

  இந்தியாவில் இதுவரை இந்த உருமாறிய கொரோனா வைரஸ் வகை கண்டறியப்படவில்லை என்பது நம்பிக்கை அளித்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம் பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: