மும்பைக்கு ராணுவத்தை அழைக்கும் திட்டமில்லை...! உத்தவ் தாக்கரே தகவல்

உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர்.

"ராணுவத்தை அழைப்பதற்கான தேவை எதுவும் இல்லை"

  • Share this:
    மும்பையில் ஊரடங்கை கடுமையாக்க ராணுவத்தை அழைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மும்பை உள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த, ஊரடங்கை தீவிரமாக்க ராணுவம் அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ராணுவத்தை அழைப்பதற்கான தேவை எதுவும் இல்லை என்றும், அவசியமெனில் மத்திய படைகள் அழைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: