வாடகைக் கார் பயணத்தில் இனி ஷேரிங் கிடையாது - ஓலா, உபெர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரமாகவே மெட்ரோ நகரங்களில் ஓலா, உபெர் சேவைகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன.

வாடகைக் கார் பயணத்தில் இனி ஷேரிங் கிடையாது - ஓலா, உபெர் அறிவிப்பு
(மாதிரிப்படம்)
  • Share this:
வாடகைக் காரில் பயணம் செய்ய அடுத்த சில நாட்களுக்கு ஷேரிங் ஆப்ஷன் கிடையாது என ஓலா, உபெர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓலா மற்றும் உபெர் போன்ற வாடகைக் கார் சேவை நிறுவனங்கள் இனி சிறிது நாட்களுக்கு கார் பயணம் ஷேரிங் செய்யும் ஆப்ஷனை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் தேவையில்லா பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.


கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரமாகவே மெட்ரோ நகரங்களில் ஓலா, உபெர் சேவைகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. நிறுவனங்கள் மட்டுமின்றி ஓட்டுநர்களும் அன்றாட ஊதியம் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: கொரோனா பாதிப்புள்ள ஓட்டுநர்களுக்கு தினமும் 1,000 ரூபாய்- ஓலா அறிவிப்பு
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading