அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் இரு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு தொற்று உறுதியானதால், மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading