பொய் செய்தி பரப்பினாரா ரஜினி? பதிவை நீக்கி ட்விட்டர் நடவடிக்கை

பொய் செய்தி பரப்பினாரா ரஜினி? பதிவை நீக்கி ட்விட்டர் நடவடிக்கை
  • Share this:
அறிவியல் ஆதாரமற்ற தகவலை வீடியோவாக வெளியிட்டதால் ரஜினிகாந்தின் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி ட்வீட் செய்திருந்த ரஜினிகாந்த் வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 -லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 -வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்.


இதேமாதிரி இத்தாலியில் கொரோனா இரண்டாவது நிலையில் இருந்த போது அந்நாட்டின் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மக்கள் உதாசீனப்படுத்தியதால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதைப்போன்ற ஒரு நிலை இந்தியாவில் வந்துவிடக்கூடாது.

ஆகவே பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 22-ம் தேதி பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுபோம். கொரோனா வைரஸைத் தடுக்க, சரிசெய்ய உயிரை பணையம் வைத்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை பிரதமர் சொன்னது போல் மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பத்தார் நலமாக வளமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்” என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த வீடியோவில், “வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 -லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 -வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று பலரும் புகாரளித்தனர்.இதையடுத்து வீடியோ பதிவை நீக்கியுள்ளது ட்விட்டர் நிர்வாகம். யூடியூபில் மட்டும் தற்போது அந்த வீடியோ பதிவை பார்க்க முடியும்.


மேலும் படிக்க: கொரோனா : ரொமான்ஸிலும் பொறுப்பு... சீரியல் நடிகை வெளியிட்ட முத்த புகைப்படம்!
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்