ரஜினிகாந்தை அடுத்து மற்றொரு பிரபல நடிகரின் ட்வீட்டும் நீக்கம்!

ரஜினிகாந்தை அடுத்து மற்றொரு பிரபல நடிகரின் ட்வீட்டும் நீக்கம்!
நடிகர் ரஜினிகாந்த்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை நீக்கியிருந்த ட்விட்டர் நிர்வாகம், தெலுங்கு நடிகர் பவர் கல்யாண் வெளியிட்ட வீடியோவையும் நீக்கியுள்ளது.

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 -லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 -வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் தெரிவித்த இந்தக் கருத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று பலரும் புகாரளிக்கவே ட்வீட்டை நீக்கியது ட்விட்டர் இந்தியா நிர்வாகம். அதேபோல் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா குறித்து ட்வீட் செய்திருந்த கருத்தையும் ட்விட்டர் இந்தியா நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் தவறான தகவலை பதிவிட்டதாக ட்வீட் நீக்கப்பட்டதாக ட்விட்டர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பவன் கல்யாண் ஆகியோரின் ட்வீட்கள் முதல்முறையாக நீக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் ஒரு கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் சரியான தகவல்களைப் பெற்று மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் வலைதளவாசிகள்.

மேலும் படிக்க: லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்