கொரோனோ வைரஸ் தாக்கம்: டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலை உயர்கிறதா..?

கொரோனோ வைரஸ் தாக்கம்:  டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலை உயர்கிறதா..?
கொரோனோ வைரஸ் தாக்கம்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் உற்பத்தியும், ஏற்றுமதியும் முடங்கியுள்ளதால், இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை உயரும் என கூறப்படுகிறது.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் டிவி பேனல்களின் விலை குறைவு என்பதால், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அங்கு உற்பத்தி குறைந்து, பேனல் ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.

இதனால் பேனல்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால், தொலைக்காட்சி பெட்டிகளின் விலையை உயர்த்த டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்