தமிழகத்தின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவரும் 2 மாவட்டங்கள்..

விருதுநகர் மற்றும் தூத்துக்குடியில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவரும் 2 மாவட்டங்கள்..
கோப்புப்படம்
  • Share this:
தமிழக தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து அதிக தொற்று பாதிப்புகளைச் சந்தித்த மாவட்டங்களாக விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களாக இந்த 2 மாவட்டங்களிலும் தொற்றுகளின் எண்ணிக்கை கூடிவருகிறது.

மதுரையில் தொற்று பாதிப்பு 9000-ஐ நெருங்கியுள்ள நிலையில், விருதுநகர், தூத்துக்குடியில் தொற்று பாதிப்பு 5000-ஐக் கடந்திருக்கிறது. விருதுநகரில் கடந்த ஜூன் 30ம் தேதி 493 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தூத்துக்குடியில் ஜூன் 30-இல் 943 பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

விருதுநகரில் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளதாக மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருவதாகவும் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விருதுநகரில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


வெளி்மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தூத்துக்குடியில் தொற்று அதிகரித்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். பரிசோதனை முடிவுகள் தாமதத்தை தவிர்த்து, படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading