கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்

கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்
துர்க்மேனிஸ்தான் அதிபர்
  • News18
  • Last Updated: April 1, 2020, 10:37 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி பயன்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டுவித்து வரும் நிலையில்,அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளும் இதற்குத் தப்பவில்லை. எனினும், துர்மேனிஸ்தான், மத்திய பசுபிக் கடலில் உள்ள குட்டி குட்டி தீவு நாடுகளில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க்மேனிஸ்தானில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை. இதனால், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால் கைது நடவடிக்கை பாயும் என்று அந்நாடு அறிவித்து இருக்கிறது.


மேலும், ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாலைகளில் அல்லது வேறு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து யாராவது சென்றால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

துர்மேனிஸ்தானின் அண்டை நாடான ஈரானில், கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் அரசாங்கம் சர்வாதிக்கத்தை இதன் மூலம் வலுப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ஊடக சுதந்திர தரவரிசையில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் துர்மேனிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இடத்தில் வடகொரியா இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading