• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. அறிக்கையை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. அறிக்கையை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

மழைக் காலமான செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்திற்குப் போனால் என்ன செய்வது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    கொரோனா பரவல் தொடர்பான தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது: ”தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாக கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும்.

    ‘ஜூலை 15ம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3,30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் சென்னையில் மட்டுமே 1,50,000 பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 1,654 பேர் உட்பட தமிழகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 1,949ஆக இருக்கும்.

    மேலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கும்’ என்றெல்லாம் மருத்துவப் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    பாதிப்பு ஆயிரங்களில் இருக்கும்போதே அரசு மருத்துவமனைகள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனைகளையும் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்துவது பற்றிய திட்டமோ, செயல்பாடோ இருப்பதாகவும் தெரியவில்லை.

    மழைக் காலமான செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்திற்குப் போனால் என்ன செய்வது? சென்னையில் வடிகால்களைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்தால்தான் மழைக்கால பாதிப்புகளோடு சேர்த்து கொரோனா பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியும்."

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: