11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்... டிடிவி.தினகரன்!

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

 • Share this:
  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

  தேசிய அளவில் அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளது, மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயல் என சாடியுள்ளார்.  எனவே, மீதம் உள்ள தேர்வுகளை ஒத்திவைத்துவிட்டு, தமிழகத்தில் குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் கோரியுள்ளார்.

  கொரோனா தடுப்புக்கு அரசியல் கட்சிகளும், மக்களும் அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கும் போது, முதலமைச்சர் 'ஈகோ' பார்க்காமல் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: