கொரோனா அச்சத்தால் தம்பதி தற்கொலை - ஆதரவின்றி நிற்கும் 12 வயது மகன்

கொரோனா அச்சம் காரணமாக, ஆந்திராவில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சத்தால் தம்பதி தற்கொலை - ஆதரவின்றி நிற்கும் 12 வயது மகன்
கொரோனா அச்சம்: மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை
  • Share this:
ஆந்திரபிரதேசத்தின் பெருவாரியான இடங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய் கொரோனாவால் உயிரிழந்தார். பனிராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது.

இந்நிலையில், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தாய் உயிரிழப்பால், மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பனிராஜும், மனைவியும் மாடியிலிருந்து குதித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதனால், 12 வயது மகன் ஆதரவின்றி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், கொரோனாவில் இருந்து இருவரும் மீண்டு வந்தாலும், பொருளாதார நிலை, கடன் நெருக்கடி என்று பல பிரச்னைகளைல் பனிராஜ் இருந்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading