• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நிதியை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்தும் - உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

நிதியை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்தும் - உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

ட்ரம்ப்

ட்ரம்ப்

"அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்"

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க பரிசீலனை செய்யும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனாமிற்கு எழுதிய கடிதத்தை, அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், கொரோனா குறித்து சீன அரசாங்கம் வெளியிட்ட முரண்பாடான அறிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு விசாரிக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.



    இந்த விவகாரத்தில், 2003-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்த ஹார்லெம்(HARLEM) போல் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    இதேநிலை நீடித்தால், உலக சுகாதார அமைப்புக்கான நிதியை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்தும் எனவும், அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: