அமெரிக்க அதிபர் டிரம்பின் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட வெள்ளை மாளிகை...!

CoronaVirus | "கொரோனா பாதிப்பின் மையமாக ஐரோப்பியா திகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது"

அமெரிக்க அதிபர் டிரம்பின் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட வெள்ளை மாளிகை...!
டொனால்ட் டிரம்ப்
  • News18
  • Last Updated: March 15, 2020, 6:53 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் இதுவரை 5,764 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டென்மார்க் நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப், தானும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 137 நாடுகளுக்கு தனது எல்லையை விரிவாக்கியுள்ள கொரோனா, 5764 உயிர்களை பலிவாங்கியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3200 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1266 பேர் உயிரிழந்துள்ளனர். டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயிரிழப்பு 40ஐ கடந்துள்ள நிலையில், அவசரநிலையை அமல்படுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய அதிபர் டிரம்ப்,  தானும் கொரோனா சோதனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.


மாதிரிப் படம்


அவரது பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட வெள்ளை மாளிகை, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பின் மையமாக ஐரோப்பியா திகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவை தவிர உலகம் முழுவதும் தனது விற்பனை மையங்கள் அனைத்தும் வரும் 27-ம் தேதி வரை மூடப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் 4200 பேர் பாதிக்கப்பட்டு, 120 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலில் 600 பேருடன் சென்ற கப்பலில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், அந்த கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தாங்கள் கட்டுப்படுத்திவிட்டுவதாக கூறியுள்ள சீனா, வெளிநாடுகளில் இருந்து கொரோனா பாதிப்புடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading