கொரோனாவை தவிர்க்க தினமும் மாத்திரை சாப்பிடும் டிரம்ப்...!

73 வயதான டிரம்ப், தினமும் கெரோனா பரிசோதனை செய்து கொள்கிறார்

கொரோனாவை தவிர்க்க தினமும் மாத்திரை சாப்பிடும் டிரம்ப்...!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • Share this:
கொரோனா வரும் முன் காக்கும் நடவடிக்கையாக மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை தினமும் சாப்பிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒன்றரை வாரமாக மாத்திரையை எடுத்துக் கொள்வதாகவும், அது நல்லது என்றும் கூறினார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும், பிற பணியாளர்களும் கூட ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.


கொரோனா தொற்று உடையவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை கொடுத்தால் இருதய பிரச்னை வருவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. 73 வயதான டிரம்ப், தினமும் கெரோனா பரிசோதனை செய்து கொள்கிறார்.










Also see...
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading