சீனாவின் ஊஹான் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்பும் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா பரவலுக்கும், சீனாவுக்கும் தொடர்பு இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊகான் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அது குறித்த விவரங்களை வெளியிட தனக்கு அனுமதியில்லை எனக் கூறிய அவர், சீனாவுக்கு மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க இருப்பதாகவும் கூறினார்.
மேலும் சீனாவின் செய்தி தொடர்பாளராகவே உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக விமர்சித்த அவர், சீனா சொல்லிக் கொடுப்பதையே உலக சுகாதார நிறுவனம் உலகத்திற்கு தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.