சர்வதேச அளவில் கொரோனோ வைரஸால் 5000 பேர் பலி; அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் உயிரிழப்பு 40ஐ கடந்துள்ள நிலையில், அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

சர்வதேச அளவில் கொரோனோ வைரஸால் 5000 பேர் பலி; அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்
மாதிரிப்படம் (Reuters)
  • Share this:
கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அமெரிக்காவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 123 நாடுகளுக்கு தனது எல்லையை விரிவாக்கியுள்ள கொரோனா, 5,433 உயிர்களை பலிவாங்கியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.189 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. சவுதி அரேபியா அனைத்து வெளிநாட்டு விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களை கட்டாயம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நியூசிலாந்து உத்தரவிட்டுள்ளது.


அமெரிக்காவில் உயிரிழப்பு 40ஐ கடந்துள்ள நிலையில், அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.  மேலும் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக 3,70,000 கோடி ரூபாயை டிரம்ப் ஒதுக்கியுள்ளார்.

இதனிடையே கொரோனா பாதிப்பின் மையமாக ஐரோப்பியா திகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவைத் தவிர உலகம் முழுவதும் தனது விற்பனை மையங்கள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் 4,200 பேர் பாதிக்கப்பட்டு, 120 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் 600 பேருடன் சென்ற கப்பலில் 2 பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டதால், அந்த கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading