என் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்; கொரோனாவை கொண்டு வரமாட்டார்கள் - டிரம்ப்

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்கும் முடிவில் உறுதியாக இருக்கும் அதிபர் டிரம்ப், தன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

என் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்; கொரோனாவை கொண்டு வரமாட்டார்கள் - டிரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டாலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

இருப்பினும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.  இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்கஅதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், உங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், தான் பள்ளிகள் திறந்திருப்பதையே விரும்புவதாகவும், தன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க...

ஆளுங்கட்சியான பின்னரும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் தேடியவர் - யார் இந்த வேதரத்தினம்..?

மேலும் அவர்கள் எளிதில் தொற்றை வீட்டுக்கு அழைத்து வந்து விடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading