• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கிருமிநாசினியை உடலில் செலுத்தினால் கொரோனா அழியுமா? டிரம்ப் பேச்சால் அதிர்ச்சியடைந்த லைசால் நிறுவனம்!

கிருமிநாசினியை உடலில் செலுத்தினால் கொரோனா அழியுமா? டிரம்ப் பேச்சால் அதிர்ச்சியடைந்த லைசால் நிறுவனம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

லைசால் நிறுவனம், தங்களது தயாரிப்புகள் வெளிப்புற உபயோகத்திற்காக மட்டுமே என்றும், நிறுவனத்தின் பரிந்துரைப்படியே கிருமிநாசினிகளை உபயோகிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது.

  • Share this:
    வெளிப்புறத்தில் கிருமிகளை அழிக்க உதவும் கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்தினால் நிகழும் விளைவுகள் பற்றி ஆய்வு நடத்த வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    கடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் கைகளில் தேய்த்துக் கொள்ளும்போது கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினிகள் உடலுக்குள்ளும் நன்கு செயலாற்றலாம் என்றும் அது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

    உடனடியாக லைசால் நிறுவனம், தங்களது தயாரிப்புகள் வெளிப்புற உபயோகத்திற்காக மட்டுமே என்றும், நிறுவனத்தின் பரிந்துரைப்படியே கிருமிநாசினிகளை உபயோகிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில் நேற்று டிரம்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், தான் கிண்டலாக அவ்வாறு கூறியதாகவும்  கிருமி நாசினிகளை குடிப்பதை தான் ஊக்கப்படுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: