டிரம்ப் நடத்திய பேரணியால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்.. ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்

டிரம்ப்

டிரம்ப் தனது ஆதரவாளர்களை பற்றிக்கூட கவலைப்படுவதில்லை என்று அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

  பெரிய கூட்டங்களால் ஏற்படும் கொரோனா விளைவுகள் குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 -ம் தேதி வரை டிரம்ப் நடத்திய பேரணிகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

  இதன்படி டிரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 700 பேர் வரை உயிரிழக்க நேரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.   

  இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன், டிரம்ப் தனது ஆதரவாளர்களை பற்றிக்கூட கவலைப்படுவதில்லை என்று டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: