கொரோனா பாதிப்பால் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ உயிரிழப்பு

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் இன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ உயிரிழப்பு
தமோனாஷ் கோஷ்
  • News18
  • Last Updated: June 24, 2020, 10:44 AM IST
  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மொத்த பாதிப்பை ஒப்பீட்டளவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என்றாலும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார், 60 வயதான அவரின் மறைவுக்கு முதல்வர் மம்தா பாணர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பால்டா தொகுதியில் இருந்து 3 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட கோஷ், கட்சியின் பொருளாளராகவும் 1998 முதல் இருந்துள்ளார். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் என்று மம்தா பாணர்ஜி நினைவு கூர்ந்துள்ளார்.
படிக்கசிறையில் தந்தை, மகன் மரணம் - சந்தேகத்தை எழுப்பும் போலீஸ் FIR


படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு உயிரிழந்த மக்கள் பிரதிநிதியாக கோஷ் இருக்கிறார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading