இடம் மாறாத காந்தி சந்தை வியாபாரிகள்... திருச்சியில் தொடரும் குழப்பம்

இடம் மாறாத காந்தி சந்தை வியாபாரிகள்... திருச்சியில் தொடரும் குழப்பம்

காந்தி மார்கெட்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் நெரிசல் மிகுந்த திருச்சி காந்தி சந்தை கடைகளை கடந்தாண்டு போல் மீண்டும் பொன்மலை ஜீ கார்னர் ரயில்வே மைதானத்திற்கு மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை ஏற்காத சில்லறை வியாபாரிகள் காந்தி சந்தைகே செல்கின்றனர். அதனால் மக்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.

  • Share this:
திருச்சி மாநகரம் காந்தி சந்தையில் மொத்த, சில்லரை காய்கறி, மளிகை என 3000 கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தை மூடப்பட்டு மொத்த விற்பனை சந்தை ஜீ கார்னரிலும் 10 இடங்களில் சில்லறை விற்பனை சந்தைகளும் செயல்பட்டன. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி காந்திசந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
தற்போது காந்திசந்தை வியாபாரிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு,  கடைகள் மூடப்பட்டன.

மீண்டும் கொரோனா வேகமாக பரவும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தையை தற்காலிகமாக மூடவும் சில்லரை விற்பனை சந்தைகளை மீண்டும் திறக்கவும் திட்டமிடப்பட்டது. சந்தை இடமாற்றத்திற்கு வியாபாரிகளின் ஒரு தரப்பு எதிர்ப்பு கூறி காந்திசந்தையை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் தெரிவித்தனர். அதனால் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கதத்தினர் வியாபாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் படிக்க... இந்தியாவில் ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா

இதையடுத்து பெரும்பான்மையான வியாபாரிகள் இட மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து,  காந்தி சந்தையில் உள்ள காய்கறிக் கடைகள் மீண்டும் ஜீ கார்னர் ரயில்வே மைதானத்தில்  நேற்று முதல் (12ம் தேதி) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்துள்ளனர். மின் விளக்கு அமைத்து, கடைகளுக்கான இடங்களை அளந்து குறியிட்டுள்ளனர்.  மொத்த, சில்லறைக் கடைகள் என 1000 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளன.

இங்கு குடிநீர், கழிவறை வசதிகளை செய்திருந்தாலும் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கழிவறைகளை அமைத்து, குடிநீர் தொட்டிகளை தொடர்ந்து சுத்தப்படுத்தி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக சந்தைக்கு போகாத வியாபாரிகள்


இந்நிலையில்,  திட்டமிட்டபடி ஜீ கார்னாரில் கடைகளை திறக்கவில்லை. திறக்க வந்த சில்லறை வியாபாரிகளும் காந்தி சந்தைக்கே திரும்ப சென்றனர். மொத்த வியாபாரிகளும் இங்கு வந்தால் மட்டுமே சில்லறை கடைகளை திறக்க முடியும். இல்லையென்றால் காந்தி சந்தையில் இருந்து, சரக்கை இங்கு கொண்டு வருவதற்கான கூடுதல் செலவை,  காய்கறிகளுக்கு கூடுதல் விலையாக மக்கள் மீது திணிக்க நேரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்குமோ அதுவும் நடக்கும்..

மேலும், ஜீ கார்னர் மைதானத்திற்கு வராமல் காந்தி சந்தையிலேயே மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள்  தொடர்ந்தன. இதையடுத்து, காந்தி சந்தை நுழைவாயில் கதவுகளை மூடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தினர். (காலை 6 மணி வரை மொத்த விற்பனை நடைபெற்றது).சில்லறை விற்பனைக் காய்கறிக் கடைகள் காந்தி சந்தை, ஜீ கார்னர்  தற்காலிக சந்தை 2 இடங்களிலும் திறக்கப்படவில்லை. வியாபாரிகளுக்குள் ஒத்த கருத்து ஏற்படததால் தொடரும் குழப்பம், சர்ச்சை தொடர்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: