சி.எம் அய்யா எங்க அப்பாவை பழைய இடத்துக்கே மாத்துங்க ப்ளீஸ் என பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவர்களின் குழந்தைகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் கடந்த அக்டோபர் தொடர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 120 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த 6 மாதங்களில் குடும்பம், குழந்தைகளை விட்டு 400 கி.மீ தூரத்திற்கு மேல் சென்று பணியாற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி தண்டிக்கப்பட்டாலும் கொரோனா காலத்தில் களத்தில் முதல் வரிசையில் நிற்கிறோம் என்கிறார்கள். குறிப்பாக, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலிருந்து குன்னூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர் இளவரசன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு பெண்ணுக்கு பிரசவ ரத்தப் போக்கு ஏற்பட்டதை அறிந்து உடனே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்.
இப்படி பணியாற்றி வரும் எங்களின் பணியிடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 200, 400 கி.மீ தூரத்திற்கு மேல் சென்று பணியாற்றும் எங்க அப்பாவை, அம்மாவை பிரிந்துள்ளோம். அவர்களை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றுங்க ப்ளீஸ் என்று குழந்தைகள் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. மனதை உருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சென்னையிலிருந்து கம்பம், திருவள்ளூர் - கன்னியாகுமரி, சென்னை - ராமநாதபுரம் என பணியாற்றிய இடத்திலிருந்து தொலை தூரங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.