காய்கறி சந்தையாக மாறிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்..!

திங்கள் முதல் திருச்சி ஜீ கார்னர் ரயில்வே மைதானத்தில் காய்கறி கடைகள் வரவுள்ளன.

காய்கறி சந்தையாக மாறிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்..!
திருச்சி மத்திய பேருந்து நிலையம்
  • Share this:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனை இன்று முதல் தொடங்கியது.

திருச்சி காந்தி சந்தையில் மொத்த விற்பனை மட்டும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நடைபெறும். சனி, ஞாயிறு விடுமுறை என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனை இன்று முதல் தொடங்கியது. தென்னூர் உழவர் சந்தையில் இருந்த 80 கடைகளில் முதல் கட்டமாக 40 கடைகள் இங்கு அனுமதிக்கப்பட்டு காய்கறி விற்பனை நடைபெறுகிறது.


பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் உரிய இடைவெளி விட்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி காய்கறி வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெறுகிறது.

இதைத் தொடந்து திங்கள் முதல் திருச்சி ஜீ கார்னர் ரயில்வே மைதானத்தில் காய்கறி கடைகள் வரவுள்ளன.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading