• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • திருச்சி & கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று

திருச்சி & கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று

கோப்புப்படம்

கோப்புப்படம்

கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் அதிகளவில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதத்தில் தமிழக சிறைகளில் உள்ள பல விசாரணைக் கைதிகள், சிறைத்துறை பரிந்துரைப்படி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவருக்கும், கடலூரில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சிறைகளில் உள்ள மற்ற கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்த சிறைத்துறை முடிவு செய்துள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: