Home /News /coronavirus-latest-news /

சீர்காழியில் அதிகரிக்கும் கொரோனா: சீர்காழி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக சிகிச்சை

சீர்காழியில் அதிகரிக்கும் கொரோனா: சீர்காழி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக சிகிச்சை

கோப்புப்படம்

கோப்புப்படம்

சீர்காழியில் இரண்டாம் நிலை சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், குறைவான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கூடுதலாக இட வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300க்கும் மேற்பட்டோர் எனவும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் இரண்டாம் நிலை சிகிச்சை மையங்களை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Also read: நாகையில் 1000-த்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை: ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகமும் மூடல்..

மேலும், அந்த சிகிச்சை மையங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குறைவான நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஒவ்வொரு இரண்டாம் நிலை சிகிச்சை மையங்களில் குறைவான அறிகுறி உள்ளவர்கள் 46 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறிய அவர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 46 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டாம் நிலை சிகிச்சை மையங்கள் உருவாகியுள்ளதாகவும், சீர்காழி பகுதியில் தலைமை அரசு மருத்துவமனையில் இரண்டாம் நிலை சிகிச்சை மையத்தை உருவாக்குவதற்கு தற்பொழுது ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் உள்ள சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். இதுவரையில் இந்த மாவட்டங்களில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்துள்ளது. அதன் முடிவுகள் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படும் என்று கூறினார்.
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Mayiladuthurai

அடுத்த செய்தி