பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்
பேருந்துகள் நிறுத்தம்
  • Share this:
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளால் பேருந்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், அதற்கேற்ப பேருந்துகளை குறைத்து இயக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Also see:


First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading