கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது எப்படி என்பதற்கான காரணங்கள்

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது எப்படி என்பதற்கான காரணங்கள்

மார்ச் 24ம் தேதி பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தார். அப்போது இந்தியாவில் சுமார் 500 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர்

  • Share this:
நவம்பர் 28ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு சுமார் 6,731 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 40,000 பேர், பிரிட்டனில் 23,361, பிரான்சில் 33,424, பிரேசிலில் 29,129, இத்தாலியில் 25,456 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரசுக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் பதிவானதை விட 4-5 மடங்கு அதிகம். இதுதவிர, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, நவம்பர் 28ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 98 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் அமெரிக்காவில் 813, பிரேசிலில் 805, பிரான்சில் 780, ஸ்பெயினில் 955, பிரிட்டனில் 846 மற்றும் இத்தாலியில் 888 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது மேற்கண்ட நாடுகளில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 8 முதல் 9 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட 97,894 கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், நவம்பர் 26ம் தேதி அன்று 43,174 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது பாதிப்பின் ஒரு கீழ்நோக்கிய போக்கைக் காட்டுகிறது. முதன் முதலில் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் குறித்து சீனா உலகிற்கு அறிவித்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, இந்தியா ஜனவரி 17 முதல் சர்வதேச விமானப்பயணிகளைத் ஸ்க்ரீனிங் செய்யத் தொடங்கியது. வைரஸ் தொற்று குறித்து அறிவிப்பு வந்த உடனேயே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட உலகின் முதல் நாடுகளில் இந்தியா உள்ளது. ஜனவரி 30ம் தேதி அன்று, முதல் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவானது.

அதைத் தொடர்ந்து கட்டுப்பாடு மற்றும் ஸ்க்ரீனிங் நடவடிக்கைகள் பல இடங்களில் நிறுவப்பட்டன. ஸ்பெக்ட்ரமின் மறுமுனையில், ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுடன் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் இந்தியாவும் முதன்மை நாடாக விளங்கியது. இந்த மூலோபாயத்திற்காக இந்தியா ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் பின்னர் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மாதிரியை ஏற்றுக்கொண்டது.

பிறகு மார்ச் முதல் வாரத்தில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். மேலும் பல்வேறு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குள், பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். முகக்கவசங்களை உலகம் முழுவதும் கட்டாயமாக்க WHO ஜூன் மாதம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தகுந்த நேரங்களில் கடைபிடிக்கப்பட்டன.

மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு: சிகிச்சைக்கான ஏற்பாடுகள்

மார்ச் 24ம் தேதி பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தார். அப்போது இந்தியாவில் சுமார் 500 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் புதிய பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் ஒரு வாரத்தில்10.9% இலிருந்து 19.6% ஆக உயர்ந்தது. மேலும் இரட்டிப்பு நேரம் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தது. இந்த நிலையில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் ஆபத்து அதிகமாகியிருக்கும்.

மேலும் நாடு முழுவதும், 15,362 பிரத்யேக கோவிட் சுகாதார வசதிகள், சுமார் 15.40 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 2.70 லட்சம் ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் மற்றும் 78,000 ஐ.சி.யூ படுக்கைகளை உருவாக்க சுகாதாரத்துறை ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 32,400 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளில் இந்த அரசு மருத்துவமனைகளில் 12,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற வளர்ந்த நாடுகள் பிபிஇ கருவிகளின் பாரிய பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்தபோது, தற்போதைய மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு 3.70 கோடி என் 95 முகமூடிகள் மற்றும் 1.60 கோடி பிபிஇக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோய் காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள்:

ஆரம்பகாலத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பரவலான தொற்றுநோய்களின் கீழ் நாடு தத்தளித்துக் கொண்டிருந்த போது, வறுமையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஊரடங்கு ஏழைகளுக்கு துன்பமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருந்தது. இதற்காக பல நிவாரணங்களை அரசாங்கம் வழங்கியது. ரூ.1.70 லட்சம் கோடி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு (பி.எம்.ஜி.கே.பி) மூலம், பெண்கள், ஏழை மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது.

இந்த திட்டத்தால் சுமார் 42 கோடி ஏழை மக்களுக்கு 68,820 கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்ததாகவும், பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் ரூ.17,891 கோடி தொகை கிட்டத்தட்ட 9 கோடி விவசாயிகளுக்கு மாற்றப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது தவிர சுமார் 3 தவணைகளில் 20 கோடி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு கிட்டத்தட்ட ரூ.31,000 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு ரூ.2,814.50 கோடி 2 தவணைகளாக கொடுக்கப்பட்டது. 1.82 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ரூ.4,987.18 கோடி மதிப்புள்ள நிதி உதவி பெற்றனர். சுமார் 13 கோடி இலவச உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்கள் ஏழை வீடுகளுக்கு வழங்கப்பட்டன. கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ், கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைப் பெற்றனர்.

உலகின் ஃபார்மசியாக விளங்கும் இந்தியா :

கொரோனா பாதிப்புகளில் உச்சத்தை கண்ட பின்னர், பிரதமர் மோடி நாட்டில் தடுப்பூசி வளர்ச்சியை தனிப்பட்ட முறையில் அணுகி வருகிறார். தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மறுஆய்வு செய்ய மூன்று நகரத்தை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதில் 2 தளங்கள் கோவிட்டை எதிர்த்துப் போராடுவதற்காக உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சியில் இந்தியா உலகத்தை வழிநடத்துவது மட்டுமல்லாமல், உலகின் தடுப்பூசி உற்பத்திக்கும் முக்கியமானதாக விளங்குகிறது.

தொற்றுநோயின் பொருளாதார தாக்கம்

நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) 7.5 சதவீதத்தால் சுருங்கியது. ஆனால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (-) 23.9 சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது மிகவும் சிறியது. இந்த இரண்டு காலாண்டுகளுக்கு இடையில், ஏற்கனவே தனியார் நுகர்வு செலவில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். வேளாண்மையை பொறுத்தவரை இரண்டாம் காலாண்டில் 3.4% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இது முதலாம் காலாண்டை போலவே உள்ளது. அதேபோல உற்பத்தி முதலாம் காலாண்டின் (-) 39.3% சுருக்கத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் காலாண்டில் 0.6% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
Published by:Vijay R
First published: