கோவை மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் உதகை, கூடலூர், கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வாடகை கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். இந்த காலகட்டத்தில்தான்,
வாடகை கார் உரிமையாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா வாடகை கார் தொழில் முடங்கியது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக, இந்தாண்டும் வாடகை கார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால், பலர்
சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவதில்லை என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர், வாடகை கார் உரிமையாளர்கள்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் 7ஆயிரத்தை தாண்டியது
வாடிக்கையாளர்கள் வராததால் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதாகவும் கார் உரிமையாளர்கள் கூறுகின்றனர். போதிய
ஊதியம் கிடைக்காததால், பிழைப்பு நடத்தவே பெரும் சிரமமாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கோவையில் தற்போது 20 சதவீத சுற்றுலா வாடகை கார்கள் மட்டுமே இயங்குவதாக, வாடகை கார் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். அரசு தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
முடங்கியுள்ள சுற்றுலா தொழிலை மீட்டெடுக்க, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.cab
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.