ஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் - டாப் இடத்தில் டிக்டாக்

"ஊரடங்கு காலத்தில் அதிகமான பேர் டவுன்லோடு செய்த செயலிகள் பட்டியலில் பேஸ்புக்கை, ஹெலோ செயலி பின்னுக்குத் தள்ளியுள்ளது”

ஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் - டாப் இடத்தில் டிக்டாக்
File Image
  • News18
  • Last Updated: May 23, 2020, 9:07 PM IST
  • Share this:
ஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் பட்டியலில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மக்களை டிவி, செல்போன், இணையம் என்று தொழில்நுட்பத்தின் உள்ளே தள்ளியுள்ளது. இணையத்தில் சமூக வலைதளங்களில்தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. சுமார் 1 கோடியே 6.12 லட்சம் பேர் இந்த செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். அடுத்ததாக, சுமார் 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.


ஆச்சரியப்படுத்தும் விதமாக மூன்றாவது இடத்தில் ஹெலோ செயலி இடம் பிடித்துள்ளது. சுமார் 66 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஹெலோ செயலி, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள்


நான்காவது இடத்தில் பேஸ்புக் உள்ளது. சுமார் 47 லட்சம் பேர் இதனை டவுன்லோடு செய்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஹெலோ லைட் செயலியும், ஆறாவது இடத்தில் பேஸ்புக் லைட் செயலியும் உள்ளது.ஹாகோ, ஸ்னாப்சாட், லாஅமோர், விமேட் ஸ்டேட்டஸ் ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலான செயலிகள் பட்டியலைப் பார்க்கும் போது, ஆரோக்ய சேது செயலி முதலிடத்தில் உள்ளது. சுமார் 2 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ள இந்த செயலி கொரோனா தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டது.

ஏப்ரல் மாதத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் செயலிகள்


இரண்டாவதாக லூடோ கிங் விளையாட்டு செயலி உள்ளது. சுமார் 1.5 கோடி பேர் இதனை டவுன்லோடு செய்துள்ளனர். வீடியோ கான்பிரன்சிங் செயலியான ஸூம், 1.5 கோடி டவுன்லோடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில் டிக்டாக், ஐந்தாவது இடத்தில் கேரம் பூல், ஆறாவது இடத்தில் யு வீடியோ, ஏழாவது இடத்தில் கூகுள் பே செயலிகள் உள்ளன. எட்டாவது இடத்தில் வாட்ஸ் அப், ஒன்பதாவது இடத்தில் இன்ஸ்டாகிராம், பத்தாவது இடத்தில் ஹெலோ செயலிகள் உள்ளன.

பிப்ரவரி மாதத்தில் இந்த பட்டியலில் வாட்ஸப் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள்


டிக்டாக், ஹெலோ, இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒப்பீட்டளவில் ஊரடங்கு காலத்தில் டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகளின் டவுன்லோடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading