கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்தியா உலகையே காப்பாற்றி வருகிறது: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி நெகிழ்ச்சி

கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்தியா உலகையே காப்பாற்றி வருகிறது: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி நெகிழ்ச்சி

மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ்.

கோவிட் 19 காலக்கட்டத்தில் உலகின் மருத்துவ மையமாக இந்தியா திகழ்கிறது. மருத்துவத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு உள்ள ஆழமான அறிவினால் விரைவில் வாக்சின் கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது என்றார் ஹோடெஸ்.

  • Share this:
    இந்திய கொரோனா தடுப்பூசி மருந்துகள் உலகையே காப்பாற்றியுள்ளது, கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியா உலகிற்கு கொடுத்த மிகப்பெரிய கொடை என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளார்.

    உலகம் கொரோனாவை எதிர்த்துப் போராடியதில் இந்தியாவின் பங்களிப்பை நாம் எளிதில் மறக்கலாகாது என்கிறார் டாக்டர் பீட்டர் ஹோடெஸ், இவர் ஹூஸ்டன் பேயர் மருத்துவக் கல்லூரி டீன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் இந்தக் கருத்தை முன் வைத்தார்.

    டாக்டர் பீட்டர் ஹோடெஸ் உலகப்புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆவார். இவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வாக்சின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படுகிறது, இது தவறு, உலகையே இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் காக்கின்றன, அதை குறைத்து மதிப்பிடுவது தவறு என்று வெபினாரில் பேசியுள்ளார்.

    கிரேட்டர் ஹூஸ்டனில் இந்திய-அமெரிக்க வர்த்தகக் கழகம் இந்த இணையவழி கருத்தரங்கத்தை நடத்தியது. புனேயில் உள்ள செரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்த கொரோனா தடுப்பு கோவிஷீல்டை பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அவசரநிலை அனுமதியளித்துள்ளது.

    அதே போல் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து தயாரித்த கோவாக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர் ஹோடெஸ் வாக்சின் ஆராய்ச்சியில் முதன்மையானவர் என்று கருதப்படுகிறது, இவர் இந்திய மருந்து நிறுவனங்களுடன் ஆய்வில் ஈடுபட்டு மலிவான விலையில் வாக்சின் கண்டுப்பிடிக்கும் பணியில் கூட்டிணைந்துள்ளார்.

    கோவிட் 19 காலக்கட்டத்தில் உலகின் மருத்துவ மையமாக இந்தியா திகழ்கிறது. மருத்துவத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு உள்ள ஆழமான அறிவினால் விரைவில் வாக்சின் கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது என்றார் ஹோடெஸ்.

    இந்திய தயாரிப்பான கொரோனா வாக்சின் தடுப்பூசிகளுக்கு தற்போது உலக நாடுகளிடமிருந்து தேவை அதிகரித்துள்ளது.

    பல நாடுகள் இந்தியாவை கோவாக்சின், கோவிஷீல்ட் வாக்சின் கேட்டு அணுகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஞாயிறன்று இந்தியாவில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொர்ணாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,84,523 ஆக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் 84% பாதிப்புகள் 5 மாநிலங்களில்தான் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: