கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பிரபல நடிகர் சொன்ன பாசிட்டிவ் செய்தி!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பிரபல நடிகர் சொன்ன பாசிட்டிவ் செய்தி!
கொரோனா
  • Share this:
கொரோனாவின் முதல் அறிகுறியின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தானும், தனது மனைவியும் நலமாக இருப்பதாக நடிகர் டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்க்கும், அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 12-ம் தேதி உறுதிப்படுத்திய டாம் ஹாங்க்ஸ், தனிமைப்படுத்திக் கொண்டு முறையான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உலகில் உள்ள அனைவருக்கும் முக்கியமான செய்தி ஒன்றை டாம் ஹாங்க்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவின் முதல் அறிகுறியின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தானும் தனது மனைவியும் நலமாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் ஆரோக்கியமான ஒன்று என கருதுவதாக தெரிவித்துள்ள டாம் இதன் மூலம், யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம் என்பதை உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் . இதுவும் கடந்து போகும் என்ற மந்திர சொல்லே கரோனாவிற்கு தீர்வு என டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: கொரோனா: சினிமா தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவிFirst published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்