கட்டுக்குள் வருமா கொரோனா... திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படுமா ?

கட்டுக்குள் வருமா கொரோனா... திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படுமா ?
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: February 27, 2020, 10:49 AM IST
  • Share this:
மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஒலிம்பிக் கிராமத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதுடன், உலகம் முழுவதும் இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் ஜப்பானையும் விட்டுவைக்கவில்லை. ஓஹியோ நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நடுக்கடலில் பயணிகள் கப்பலை நிறுத்திவைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.


Also see...கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!

இதனால் திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஆலோசனை மேற்கொண்டது. அதில் மே மாதத்திற்கு கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டிகளை ஒத்திவைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமோ ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு முதல் உலகப்போரின் காரணமாக 1916-ம் ஆண்டு ஒலிம்பிக்கும், 2-ம் உலகப்போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் ரத்தாகியுள்ளன.Also see...கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்... பாய்... நடனம்!

ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமல்லாது கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தெற்காசியாவில் ரத்தாகியுள்ளன, அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு இத்தாலியில் நடைபெறவிருந்த சீரிஸ் ஏ கால்பந்து போட்டி ரத்தாகியுள்ளது.

சீனாவின் நான்ஜிங்கில் மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள் அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 19-ல் நடக்கவிருந்த சீனா கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் மார்ச் இறுதியில் நடக்கவிருந்த டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading