மின்கட்டண வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்.

மின்கட்டண வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு காலத்தில் செலுத்தப்பட்ட முந்தைய மின் கட்டண அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட மின் கட்டண தொகைக்கு பதிலாக அதற்கான யூனிட்டை கழித்துக் கொண்டு எஞ்சிய யூனிட்டுகளுக்கான தொகையை இரு தனித்தனி பில்களாக பிரித்து மின் கட்டணம் வசூலிக்கக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக மின் கணக்கீடு செய்யும்போது ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துக் கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும், இதில் விதி மீறல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க...

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading