தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள்

Corona | தமிழகத்தில் இன்றுடன் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 8, 2020, 3:49 PM IST
  • Share this:
கடந்த மார்ச் 25ம் தேதி மதுரையில் சிகிச்சையில் இருந்த 54 வயது கொரோனா நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் 94 நாட்களில் முதல் ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் அடுத்தடுத்த கொரோனா உயிரிழப்புகள் வேகமாக நிகழ்ந்தன. சராசரியாக எட்டு முதல் பத்து நாட்களுக்கு ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்த பிறகு கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளுக்கு 60 முதல் 70 என குறைய தொடங்கியது. தற்போது சராசரியாக இரண்டு வாரங்களில் ஆயிரம் பேர் உயிரிழக்கும் நிலை உள்ளது.

இந்தியாவில் இதுவரை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் தான் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளன. ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் மகாராஷ்ட்ராவில் கொரோனா உயிரிழப்பு 10,000 தாண்டியது. தற்போது 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.


மார்ச் 25-ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டது. 94 நாட்கள் கழித்து ஜூன் மாதம் 27-ம் தேதி முதல் ஆயிரம் இறப்புகள் நிகழ்ந்தன. ஜூலை 13ம் தேதி வரை 17 நாட்களில் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஜூலை 22ம் தேதி வரை பத்து நாட்களில் அடுத்த 1000 பேர் உயிரிழந்து கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்தது.

அடுத்த 9 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதி மேலும் ஆயிரம் பேர் உயிரிழந்து உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்தது. மேலும் 9 நாட்களில் மேலும் ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஆகஸ்ட் 10ம் தேதி வரை தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.



Also read... கொரோனா விதிமுறைகளை பெண்கள்தான் அதிகம் ஃபாலோ பண்றாங்க - ஆய்வில் தகவல்ஆகஸ்ட் 18ம் தேதி வரை தமிழகத்தில் 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,000 இருந்து 6,000 உயர்ந்தது. மீண்டும் அடுத்த பத்து நாட்களில் ஆயிரம் பேர் மேலும் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மாநிலத்தின் கொரோனா உயிரிழப்புகள் ஆகஸ்ட் 28ம் தேதி வரை 7 ஆயிரமாக இருந்தது.

அடுத்த பத்து நாட்களில் செப்டம்பர் 8ம் தேதி வரை மாநிலத்தின் கொரோனா உயிரிழப்புகள் 8ஆயிரமாக உயர்ந்தது. அடுத்த இரண்டு வாரத்தில் செப்டம்பர் 23ம் தேதி வரை 9 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று அக்டோபர் 8ம் தேதி வரை 17 நாட்களில் அடுத்த 1000 பேர் கொரோனாவினால் உயிரிழந்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் 10,000 கடந்துள்ளது.
First published: October 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading