தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்
காய்ச்சல் முகாம்
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து 5005 பேர் குணமடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 5005 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,32,708 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 57 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,586 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1132 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading