புதுச்சேரியில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் சொற்ப எண்ணிக்கையில் இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது.

புதுச்சேரியில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
புதுச்சேரியில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
  • Share this:
புதுச்சேரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து கடந்த 15 நாட்களாக சராசரியாக 50 முதல் 70 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 18 பேர் இதனால் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழதனர். அவர்களில் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவரும் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒருவரும் இறந்தனர்.

மேலும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த  ஒருவரும்  இறந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனதவே சிறுநீரக கோளாறு ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நேற்றைய தினம் 687 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் 67 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் புதுச்சேரியில் 57 பேரும் ஏனாமில் 10 பேரும் அடங்குவர்,

புதிதாக கதிர்காமம் கொரோன மருத்துவமனையில் 34 பேரும் ஜிப்மரில் 23 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய தினம் ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரொனா மருத்துவமனையில் 360 பேரும், ஜிப்மரில் 131 பேரும், கொவிட் கேர் சென்டரில் 111 பேரும் என 602 பேர் சிகிச்சையில உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் முதியோர் இறப்பு அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...

கொரோனா சிகிச்சை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிமுறையில் சிகிச்சை

புதுச்சேரியில் இதுவரை 95 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் முதியவர்கள்தான் இறந்துள்ளனர். இதனால் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். ஏற்கனவே உள்ள நோய்களுக்காக மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவிட்ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் நியூஸ் 18 க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading