கொரோனா சிறப்பு நகைக்கடன் வழங்கும் திட்டம்: கூட்டுறவு வங்கி அறிவிப்பு...!

கொரோனா நோய் தொற்று காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிறப்பு நகைக்கடன் வழங்கும் திட்டம்: கூட்டுறவு வங்கி அறிவிப்பு...!
கோப்புப் படம்
  • Share this:
குறைந்த வட்டி விகிதத்தில் நகைகடன் திட்டத்தை தமிழ்நாடு மாநில கூட்டுறவு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய திட்டத்தில் கிராம் ஒன்றுக்கு, 3,300 ரூபாய் வரை கடன் வழங்கப்படும். குறைந்தபட்ச கடனாக 25,000 ரூபாயும், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றிக்கான நகை மதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள நகைக் கடன் திட்டத்தை விட 10 சதவீத அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TNSC கூட்டுறவு வங்கி வெளியிட்ட பத்திரிகைச் செய்தி


இந்த நகைகடனை தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் 47 கிளைகளிலும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் எளிய, நடுத்தரவர்க்கத்தினருக்கு இந்த கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புவதாக கூட்டுறவு வங்கி தெரிவித்துள்ளது.இந்த அளவிற்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் திட்டத்தை இந்தியாவில் எந்த ஒரு வங்கியிலோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்திலோ இதுவரை அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading