• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தெலங்கானாவைப் போல தமிழக அரசும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை

தெலங்கானாவைப் போல தமிழக அரசும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெலங்கானா மாநில அறிவித்துள்ளது. அதைத் தொடந்து தமிழக அரசும் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் தமிழ்நாட்டில் மட்டும் பழனிசாமி அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவது என்று பிடிவாதம் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

    தேர்வுத்துறை இணை இயக்குநரே கொரோனா பாதிப்புக்கு ஆளான பிறகும் அரசு விடாப்பிடியாக நிற்கிறது. கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர் நீதிமன்றத்தில் சொல்லும் தமிழக அரசுக்கு, மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி கவலையில்லையா?

    கொரோனா விவகாரத்தில் நிர்வாகத் திறனில்லாமல் ஆரம்பம் முதலே தவறு மேல் தவறுகளைச் செய்து நோயைக் கட்டுப்படுவதில் தோற்றுப்போய் நிற்கிற பழனிசாமி அரசு, இவ்வளவு ஆபத்திற்கு இடையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி இன்னொரு மோசமான தவறைச் செய்து பெரும் பழிக்கு ஆளாகிவிடக்கூடாது" என்று கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: