TN Corona: தமிழகத்தில் இன்றைய (ஜூன் 29) கொரோனா நிலவரம்: மொத்த பாதிப்பில் பாதியளவு 6 மாவட்டங்களில் பதிவு!

மாதிரிப் படம்

சென்னையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3307 ஆகவும், கோவையில் 4676 ஆகவும், ஈரோட்டில் 4163 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது

  • Share this:
    தமிழகத்தில் இன்று 4,512  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் பாதிப்பின் அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது. இதனையடுத்து இன்றைய கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளிட்டிருக்கிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் 4,512 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 563 பேருக்கும் ஈரோட்டில் 493 பேருக்கும் சேலத்தில் 302 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் பாதியளவு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,  செங்கல்பட்டு, சென்னை ஆகிய 6 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    சென்னையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3307 ஆகவும், கோவையில் 4676 ஆகவும், ஈரோட்டில் 4163 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது

    கடந்த 24 மணி நேரத்தில்  118பேர்  கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை  32,506 ஆக உயர்ந்துள்ளது.   மேலும், 6,013 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியதையடுத்து,  சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை  40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 39,335 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    Must Read: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். நியமனம்!


    இன்று ஒரே நாளில் 1,60,423 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளாது. இதுவரை 3,26,75,628 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
    Published by:Murugesh M
    First published: