• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Tamil Nadu Lockdown: உரிய மருத்துவ தேவை, இறப்பு காரணங்களுக்கு மட்டுமே இ-பதிவுக்கு அனுமதி

Tamil Nadu Lockdown: உரிய மருத்துவ தேவை, இறப்பு காரணங்களுக்கு மட்டுமே இ-பதிவுக்கு அனுமதி

ஊரடங்கு

ஊரடங்கு

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 24-ம் தேதி முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தபடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்தமுறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இ-பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இறப்பு, திருமணம்,
    முதியோர் பராமரிப்பு,மருத்துவ அவசரம் இந்த நான்கு காரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு  காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்

    •மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்

    • பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்

    • பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்

    • தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்

    • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.

    • உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: