108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என அவர் கேட்டுக்கொண்டார்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
  • Share this:
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ”கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.”


இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

Also see:
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading