கன்னியாகுமரி கொரோனா வார்டில் அடுத்தடுத்து மூவர் மரணம் - சுகாதாரத்துறை விளக்கம்

கன்னியாகுமரி கொரோனா வார்டில் அடுத்தடுத்து மூவர் மரணம் - சுகாதாரத்துறை விளக்கம்
  • Share this:
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 66 வயது மரியஜான். இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியவுடன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். அவரது மகன் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்து வந்தவர். அவர், கடந்த 13 ம் தேதி ஊர் திரும்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து மரியஜான் காய்ச்சல், இருமலால் அவதிபட்டுள்ளார். இதனால் அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்தது.


கொரோனா வார்டு


ஏற்கனவே அவரது ரத்த மாதிரிகள் ஆய்வில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென இன்று உயிரிழந்தார். இந்நிலையில் அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுகாதார துறை சார்பில் கூறியிருப்பதாவது, 2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும், 66 வயது மீனவர் சிறுநீரக நோய் காரணமாகவும், 24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்று ரத்தத்தில் கலந்து நச்சுதன்மையாக மாறியதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்றும் இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது  என்று கூறினர்.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை


கன்னியாகுமரியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் விவரம்:

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இது நாள் வரை 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் கொரோனா தொற்று இல்லாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் தனிமை படுத்தப்பட்ட வார்டில் உள்ள நிலையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளார். இவர்களையும் சேர்த்து இதுவரை தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்களின் விவரம்:

எஸ்தர் ராணி 59, ஜான் 49, ஜெகன் 49, இவர்கள் அனைவரது ரத்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தது குறிப்பிடதக்கது.

அரசின் விளக்கம்


Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading