தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகளால் சேமிக்கப்படும் தொகை எவ்வளவு...? பற்றாக்குறை எவ்வளவு?

”பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதன் மூலமாக அரசுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்”

தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகளால் சேமிக்கப்படும் தொகை எவ்வளவு...? பற்றாக்குறை எவ்வளவு?
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம்
  • News18
  • Last Updated: May 23, 2020, 10:12 PM IST
  • Share this:
தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு சிக்கன நடவடிக்கைகளால், நடப்பாண்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், பட்ஜெட் மதிப்பீட்டில் 50 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு வரி வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. அதை ஈடுசெய்வதற்காக பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020-21 ம் நிதியாண்டில் அனைத்து துறைகளுக்கும் பல்வேறு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் குறிப்பிட்ட அளவைக் குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


வழக்கமான செலவுகளில் 20 சதவீதத்தைக் குறைப்பது, அரசுரீதியிலான விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளுக்கான செலவினம், புதிய வாகனங்கள் வாங்குவதில் 50 விழுக்காட்டை குறைப்பது, அரசு செலவில் அதிகாரிகள் வெளிநாடு செல்வது ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்மூலம், தமிழக அரசுக்கு 800 கோடி ரூபாய் அளவுக்கு மீதமாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோல், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியதால் இந்த ஆண்டு ஓய்வுபெறவிருந்தவர்களுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 950 கோடி ரூபாய் நிதி அரசு சேமிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை இந்த ஆண்டு நிறுத்தி வைத்தது மூலம் அரசு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சேமித்தாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதேபோல், அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதன் மூலமாக அரசுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

டாஸ்மாக் மதுபான விலைஉயர்வு மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், சேமிப்பு மற்றும் வரிவிதிப்பு நடவடிக்கைகள் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிடைத்திருந்தாலும் காமதேனுவாக விளங்கும் பத்திரப்பதிவு, டாஸ்மாக் மதுக்கடை, வாகனப் பதிவு உள்ளிட்ட முக்கிய வரி வருவாய் இனங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட வரி வருவாயில் 50 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், சரிவிலிருந்து மீளும் வேகத்தைப் பொறுத்து, இத்தொகை கூடவோ குறையவோ கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading