ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட சிகிச்சைகள்: தமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி...

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட சிகிச்சைகள்: தமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி...

கோப்புப் படம்

கோப்புப் படம்

உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சில நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக சுகாதாரத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.

ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் அமைக்க வேண்டும் என்றும், சிகிச்சை பெறுவோர் வந்து செல்வதற்கு தனி பாதை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் மற்ற பொது நோயாளிகளை, கொரோனா அறிகுறியுடன் உள்ளவருடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக்கூடாது என்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நிலையான கிருமிநாசினி நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நில விவகாரம்: ஆந்திர முதல்வருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Organ donation