• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அண்டை மாநில தொழிலாளர்கள் பயணம் - விதிகளை தளர்த்தியது தமிழக அரசு

அண்டை மாநில தொழிலாளர்கள் பயணம் - விதிகளை தளர்த்தியது தமிழக அரசு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்களின் பயண விதிகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது.

  • Share this:
அண்டை மாநில தொழிலாளர்கள் 48 மணி நேரத்திற்குள் அந்தந்த பகுதிகளுக்குத் திரும்பும் பட்சத்தில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லாமல்,  தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது அனுமதித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது எனவும், மேலும் இது இரு மாவட்ட நிர்வாகத்தின் பரஸ்பர ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் தலைமை செயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும் அத்தகைய நபர்களுக்கு இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல உதவும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

India-China Border Violence LIVE | லடாக் மோதல் - 20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: