• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அடுத்த அறிவிப்பு அதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்...! நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

அடுத்த அறிவிப்பு அதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்...! நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

ஓ.பன்னீர் செல்வம் (கோப்புப்படம்)

ஓ.பன்னீர் செல்வம் (கோப்புப்படம்)

"வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா ஊரடங்கால் வருவாயை இழந்துள்ள மாநில அரசுகளுக்கும் நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களால், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

    சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா ஊரடங்கால் வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் அடுத்த அறிவிப்பாக அது இருக்கும் என்று நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: