• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் சென்னையைக் கடந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், உள் மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 849 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

    கொரோனா குறித்து இன்னுமும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே நோய் பரவலுக்குக் காரணம் என மருத்துவர் யுவராஜ் கூறுகிறார்.

    திருவண்ணாமலையில் 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்திருக்கிறது.

    செங்கல்பட்டில் 126 பேர், திருவள்ளூரில் 120 பேர் பாதிக்கப்பட்டனர். இதேபோல, தூத்துக்குடியில் 62 பேர், ராணிப்பேட்டையில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலத்தில் மேலும் 24 பேருக்கும், திருச்சியில் 51 பேருக்கும் தொற்று உறுதியானது. குமரியில் மேலும் 10 பேரும், சிவகங்கையில் 33 பேரும் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் படிக்க...

    உலகளவில் கொரோனா பாதிப்பின் நிலை என்ன...?

    தொற்று குறைந்து காணப்பட்ட நீலகிரியில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: