தமிழகத்தில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 6,618 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் 2314 பேர் இன்று நோய்த்தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  இதுவரை மொத்தம் 8,78571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்திருப்பதாகவும், 9,33,434 ஆக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: